250 கோடியில் வீடு கட்டிய பாலிவுட் நட்சத்திர தம்பதிகள் | பிளாஷ்பேக்: மருத்துவமனை படுக்கையில் இருந்து இளையராஜா உருவாக்கிய பாடல் | பிளாஷ்பேக்: 3 கேமராக்களில் படமான முதல் பாடல் | குப்பைக் கிடங்கில் இருந்த நேரம்: 'குபேரா' அனுபவம் பற்றி தனுஷ் | 24 மணி நேர சாதனை : டாப் 5ல் இடம் பிடித்த 'அகாண்டா 2' டீசர் | 'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! |
மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். அது ஏன் என்பது குறித்து அவர் அளித்துள்ள விளக்கம் வருமாறு:
சைக்கோ படம் பார்த்தேன், மிஷ்கின் உழைப்பு பிரமாதமாக இருந்தது. படம் ரொம்ப பிடிச்சிருந்தது. ஒவ்வொரு ஷாட்டிலும் கதை சொல்லியிருந்தார். ஒரு நாள் யதேச்சையாக போனில் கூப்பிட்டேன். வாங்க பேசலாம் என்றார், போனேன். அவர் பேச பேச எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.
நான் ஓசோவோட டிராவல் பண்ணினேன் என்றார். என்னடா டிராவல் இது அவர் படம்தானே பண்றார் என்று நினைத்தேன். 8 மணி நேரம் அவருடன் பேசிய பிறகுதான அவரை புரிந்து கொள்ள முடிந்தது.
பிசாசு கதை கேட்டேன். அந்த கதை ரொம்ப ஆழமாக இருந்தது. படத்தோட கேரக்டர்களை உருவாக்கி வைத்திருந்த விதம் பிரமிக்க வைத்தது. எனக்கு ஏதாவது கொடுங்க ஒரு இரண்டு நாள் பண்ணிக் கொடுக்கிறேன் என்றேன். அவரது படத்தில் பணியாற்றியது பல விஷயங்களை அவரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்காகத்தான் என்றார்.