தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழில் 'சுல்தான்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தானா. கன்னட நடிகையான ராஷ்மிகா தெலுங்கில் அறிமுகமாகி சில பல சூப்பர் ஹிட்களைக் கொடுத்து குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தவர். தற்போது அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் 'புஷ்பா' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் ராஷ்மிகாவின் கதாபாத்திர அறிமுகப் போஸ்டரை இன்று படக்குழுவினர் வெளியிட்டார்கள்.
'ஸ்ரீவள்ளி' என்ற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடிக்கும் அந்தப் போஸ்டர் ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படியே அச்சு அசல் கிராமத்துப் பெண்ணாக மாறியிருக்கிறார் ராஷ்மிகா. நிறைய எண்ணெய்யுடன் கூடிய அழுந்த வாரிய தலை, ஒரு பக்க மூக்குத்தி, புடவை அணிவதற்கு முன்பாக தன்னை அழுகுபடுத்திக் கொள்ளும் விதத்தில் காதில் கம்மள் அணியும் ராஷ்மிகா, உட்கார்ந்திருக்கும் விதமே அப்படியே கிராமத்துப் பெண் போலவே உள்ளது.
திருமணத்திற்கு முன்பு தன்னை அலங்கரித்துக் கொள்கிறாரா அல்லது ஏதோ ஒரு விசேஷத்திற்கு செல்வதற்காக இந்த அலங்காரமா என்பது தெரியவில்லை. பக்கா மாடர்ன் பெண்ணான ராஷ்மிகாவை இப்படி மாற்றிவிட்டார்களே என ரசிகர்கள் அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த வருட கிறிஸ்துமஸ் விடுமுறையில் 'புஷ்பா' படத்தின் முதல் பாகம், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தியேட்டர்களில் வெளியாகிறது.