தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழ் சின்னத்திரையின் வளர்ந்து வரும் நடிகையான ரேஷ்மா முரளிதரன், ஜீ தமிழில் ஒளிபரப்பான ‛பூவே பூச்சூடவா' தொடரின் மூலம் அறிமுகமானார். அதில் அவருடன் நடித்த சக நடிகரான மதன் பாண்டியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ‛பூவே பூச்சூடவா' முடிந்த கையோடு இருவரும் கலர்ஸ் தமிழில் ‛அபி டெய்லர்' என்ற சீரியலில் ஜோடியாக சேர்ந்து நடித்து வருகின்றனர். அபி டெய்லர் தொடரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், ஜீ தமிழின் ‛பூவே பூச்சூடவா' குழு புதிய சீரியல் ஒன்றை தயாரிக்க உள்ளது. இதில் ரேஷ்மா தான் ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் புதிய தொடரிலும் ரேஷ்மா - மதன் ஜோடியாக நடிப்பார்களா? இல்லை புது கணவரை பிரிந்து ரேஷ்மா மட்டும் தனியாக நடிக்கிறாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ரேஷ்மா நடிக்கும் புதிய தொடர் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.