23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
தொகுப்பாளினியான மணிமேகலை தமிழக இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் ஹூசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதால் பலரும் மணிமேகலை - ஹூசைன் தம்பதியினர் பற்றி நெகடிவாக பேசி வந்தனர். ஆனால், மணிமேகலையும் ஹூசைனும் தங்களது கடின உழைப்பினால் வாழ்வின் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி வருகின்றனர். பைக், கார் என படிப்படியாக வளர்ச்சிக் கண்ட இந்த ஜோடி சில நாட்களுக்கு முன் 2 ஏக்கர் நிலம் வாங்கியிருந்தனர். தற்போது அந்த நிலத்தில் சொந்தமாக வீடுகட்ட திட்டமிட்டுள்ளனர். அதன் முதற்படியாக அந்த நிலத்தில் போர் வெல் போட்டு தண்ணீர் எடுக்கும் வீடியோவை பகிர்ந்து பாஸிட்டிவாக கேப்ஷன் கொடுத்துள்ளனர். அதற்கு ரசிகர்கள் உட்பட பலரும் மணிமேகலை - ஹூசைனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.