தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சின்னத்திரை நடிகர் விஷ்ணு 'கனா காணும் காலங்கள்', 'ஆபிஸ்' உள்ளிட்ட சீரியல்களின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். ஜீ தமிழின் 'சத்யா' சீரியலில் அமுல் பேபி கதாபாத்திரத்தில் நடித்து சீரியல் ரசிகர்கள் மனதிலும் நற்பெயரை பெற்றுள்ளார். தற்போது விஷ்ணு ஜீ தமிழின் 'சத்யா 2', கலர்ஸ் தமிழின் 'இது சொல்ல மறந்த கதை' ஆகிய இரண்டு தொடர்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த இரண்டுமே மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று டாப் ஹிட் தொடர்கள் பட்டியலில் இடம் பிடித்தது. ஆனால், தற்போது கலர்ஸ் தமிழ் சேனல் நன்றாக சென்றுகொண்டிருக்கும் 'இது சொல்ல மறந்த கதை' சீரியலை திடீரென முடித்து வைத்துள்ளது.
இதன்காரணமாக ரச்சிதா மற்றும் விஷ்ணுவின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், விஷ்ணுவின் ரசிகர்களுக்கு மேலும் பேரதிர்ச்சி தரும் வகையில் 'சத்யா 2' தொடரும் மிக விரைவில் முடிவுக்கு வர உள்ள செய்தி தற்போது வெளியாகியுள்ளது. இதனால் விஷ்ணுவின் ரசிகர்கள் பலரும் சம்பந்தப்பட்ட சேனல்கள் மீதான தங்களது கோபத்தை சோஷியல் மீடியாவில் வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், விஷ்ணு வேறு எந்த ப்ராஜெக்டிலாவது கமிட்டாகியுள்ளாரா எனவும் இணையதளங்களில் ஆவலாக தேடி வருகின்றனர்.