துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
நடிகர் சந்தோஷ் பிரதாப் தமிழில் சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். எனினும், அவை பெரிய வரவேற்பை பெறவில்லை. அதன்பிறகு இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'சார்ப்பட்டா பரம்பரை' படத்தில் ராமன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், சின்னத்திரைக்கு 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார். அந்நிகழ்ச்சியில் சுனிதாவை சந்தித்த சந்தோஷ் அவருடன் நட்பாக பழகி வந்தார்.
இருவரும் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களும் வெளியிட்டு வந்தனர். திடீரென ஒருநாள் சுனிதாவின் பின்னால் ரொமாண்டிக்காக சுற்றுவது போல் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்த சந்தோஷ் 'சர்ப்ரைஸ்... காத்திருங்கள் புதிய ப்ராஜெக்டின் அப்டேட்டிற்காக' என்று பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவை பார்த்த பலரும் சுனிதாவும் சந்தோஷூம் காதலிக்கிறார்கள் என்றே நினைத்தனர். இந்நிலையில், சொந்த ஊருக்கு சென்றுள்ள சுனிதா அங்கே தன் குடும்பத்தாருடன் கோயிலுக்கு சென்று புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், சந்தோஷ் பிரதாப்பும் உடன் நிற்க ரசிகர்கள் பலரும் ஜோடி பொருத்தம் சூப்பர் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.