தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஜீ தமிழில் ஒளிபரப்பான 'என்றென்றும் புன்னகை' சீரியலின் மூலம் அறிமுகமான நிதின் கிரிஷ், தற்போது செவ்வந்தி தொடரில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த தொடரில் ஹீரோவாக நடித்து வந்த ராகவ் இறந்து போனது போல் காண்பிக்கப்பட்டதால், நிதின் கிரிஷ் கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என்று தான் ரசிகர்கள் நம்பினர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் நிதின் கிரிஷ் செவ்வந்தி தொடரிலிருந்து விலகுவதாக தனது இண்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்டிருந்த பதிவில், 'கனத்த இதயத்துடன் செவ்வந்தி சீரியலிலிருந்து வெளியேறுகிறேன். என்னிடம் சொல்லியது போல் எனது கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவத்தை தரவில்லை. நடிகராக என்னுடைய திறமையை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புகள் எனக்கு கிடைக்கவில்லை. புரொமோஷன்களுக்கு கூட அழைக்கவில்லை. விரைவில் என்னுடைய இரண்டு புதிய ப்ராஜெக்ட் பற்றி அறிவிக்கிறேன்' என்று பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவை சில மணி நேரங்களுக்குள் நீக்கிவிட்டு மற்றொரு பதிவில் லீகல் காரணங்களுக்காக பழைய பதிவை நீக்கியதாகவும், புதியதை நோக்கி நகர்ந்து செல்வதற்கான நேரம் விரைவில் இரண்டு புதிய அறிவிப்புகள் வரும் என்றும் செவ்வந்தி சீரியலை விட்டு விலகியதை நிதின் க்ரிஷ் உறுதிபடுத்தியுள்ளார்.