தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து சின்னத்திரை எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார். அண்மையில் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் ஜோதிடர்களுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்தார். இதனைத்தொடர்ந்து ஜோதிடர்கள் தரப்பில் மாரிமுத்துவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த வக்கீல் நோட்டீஸிற்கு தக்க பதிலை மாரிமுத்து அளிக்காத பட்சத்தில் அவர் மீது குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மாரிமுத்து தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு விளக்கமும் வெளிவராததால் தற்போது 30க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் ஒன்றாக இணந்து நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தால் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
எதிர்நீச்சல் தொடரின் வெற்றிக்கான முக்கிய காரணங்களில் மாரிமுத்துவின் நடிப்பும் ஒன்று. எனவே, அவர் மீது தற்போது போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.