5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு. இவர் நடித்த பிசினஸ்மேன் படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் மகேஷ்பாபு நடிப்பதாக கூறப்பட்டு வந்தது. இது குறித்து நேர்காணல் ஒன்றில் மகேஷ்பாபு கூறியிருப்பதாவது: எனது படத்தின் ரீமேக்கில் மட்டுமில்லை, ஒரிஜினல் கதை கொண்ட ஹிந்தி படத்தில் கூட நடிக்க மாட்டேன்.
தெலுங்கு படங்களில் நடித்துதான் நான் புகழ்பெற்றேன். இப்போது தெலுங்கு உள்பட தென்னிந்திய படங்களுக்கு உலக அளவில் வியாபாரம் இருக்கிறது. ஹிந்தி சினிமாவிலும் தென்னிந்திய மொழி படங்களைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள். அப்படி இருக்கும்போது, நான் ஏன் வேறு மொழிகளில் நடிக்க வேண்டும்? அதுவும் ஹிந்தியில் நடிக்கும் எண்ணமே கிடையாது. தொடர்ந்து எனது ரசிகர்களை சந்தோஷப்படுத்துவேன். என்கிறார்.
இதேபோல தற்போது பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் ஜான் ஆபிரஹாம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஜான் ஆபிரஹாம் கூறியிருப்பதாவது: தெலுங்கு படத்தில் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை. பொதுவாக எனக்கு மாநில மொழி படங்களில் நடிக்கும் எண்ணமில்லை. குறிப்பாக தென்னிந்திய மொழி படங்களில் பணத்துக்காக பிராந்திய மொழி படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். காரணம் நான் ஹிந்தி நடிகன். என்று கூறியிருக்கிறார்.