5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
முதன்முதலில் ஹிந்தியில் துவங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சி அதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் போட்டியில் எப்படி 20-20 மேட்ச் அறிமுகப்படுத்தப்பட்டதோ, அதுபோல பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு புதிய முயற்சியாக பிக் பாஸ் ஓடிடி சீசன் கடந்த வருடம் முதல் முறையாக ஹிந்தியில் அறிமுகப்படுத்தப்பட்டது. வழக்கமான பிக்பாஸ் நிகழ்ச்சி போல இல்லாமல் 24 மணி நேரமும் இது ஒளிபரப்பப்பட்டு வந்தது.
அதேசமயம் டி ஆர் பி ரேட்டிங்கிற்காக இந்த நிகழ்ச்சியில் சில வரம்பு மீறிய காட்சிகளில் போட்டியாளர்கள் ஈடுபட்டதையும் பார்க்க முடிந்தது. இது பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் முதல் சீசனை தொகுத்து வழங்கிய பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் மாற்றப்பட்டு மெயின் சீசன்களை தொகுத்து வழங்கி வரும் சல்மான்கானே இந்த ஓடிடி சீசன்-2ஐயும் தொகுத்து வழங்குகிறார். நேற்று முதல் இந்த நிகழ்ச்சி துவங்கியுள்ளது
இதுகுறித்து அறிமுக விழாவில் பேசிய சல்மான்கான் நமது கலாச்சாரத்திற்கு எதிரான எந்த ஒரு விஷயங்களும் இந்த ஓடிடி சீசனில் நடப்பதற்கு நான் அனுமதிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.