மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதன் காரணமாக மாநிலத்தின் 80 அணைகளும் திறக்கப்பட்டன. தொடர் மழையால் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியது. கேரளாவின் மொத்த மக்கள் தொகையில், 40 சதவீதம் பேர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். 483பேர் மரணம் அடைந்தார்கள். பலர் காணாமல் போனார்கள். 'ஒரு நூற்றாண்டில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளமாக இது அமைந்தது. 'கடுமையான இயற்கை பேரழிவு' என்று இந்திய அரசு இதை அறிவித்தது.
இந்த மாபெரும் இயற்கை பேரழிவு தற்போது சினிமா ஆகியுள்ளது. ஓம் சாந்தி ஓசானா, ஒரு முத்தச்சி கதா, சாராஸ் படங்களை இயக்கிய ஜூட் ஆன்டனி இயக்கி உள்ளார். அகில் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், நோபின் பவுல் இசை அமைத்துள்ளார். குஞ்சாகோ போபன், டோவினோ தாமஸ், ஆசிப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, கலையரசன், நரேன், லால், இந்திரன்ஸ், அஜு வர்கீஸ், தன்வி ராம், ஷிவதா, கௌதமி நாயர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படம் மலையாள சினிமாவின் முக்கியமான படம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து இயக்குனர் ஜூட் ஆன்டனி கூறியிருப்பதாவது: 4 ஆண்டுகளுக்கு முன்பு, 2018 அக்டோபர் 16, இந்த திரைப்படத்தை அறிவித்தேன். ஜாதி, மதம், கட்சி வேறுபாடுகள் இல்லாமல் மலையாளிகள் எப்படி ஒன்றிணைந்து வெள்ளத்தை எதிர்கொண்டார்கள் என்பது பற்றிய படம். கதையைக் கேட்டவர்களுக்கு முழு நம்பிக்கை ஏற்படவில்லை. சில படக்குழுவினர் படத்தின் படப்பிடிப்பு சாத்தியமில்லை என்று கூறினர். என்னுடைய சக எழுத்தாளர் அகில் பி தர்மஜன் மட்டுமே என் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். நாட்கள் கடந்தன. கொரோனா பெருந்தொற்றால் படத்தை அனைவரும் மறந்துவிட்டனர். ஆனால் என்னால் தூங்க முடியவில்லை. இந்த கனவு திட்டத்தை கைவிட நான் மறுத்துவிட்டேன். இப்போது அதை சாதித்து காட்டியிருக்கிறேன். என்கிறார்.