மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
மலையாள திரையுலகில் சீனியர் இயக்குனர்களில் முக்கியமானவர் சத்யன் அந்திக்காடு. அவரது மகன்களான அனூப் சத்யன், துல்கர் சல்மான் நடித்த வரனே ஆவிஷ்யமுண்டு படம் மூலமாகவும், அகில் சத்யன் பஹத் பாஸில் நடித்த பாச்சுவும் அற்புத விளக்கும் படம் மூலமாகவும் இயக்குனர்களாக அறிமுகமானவர்கள். இந்த நிலையில் அகில் சத்யன் அடுத்ததாக நிவின்பாலி நடிக்கும் ஒரு பேண்டஸி ஹாரர் படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் ஒரு பேயும் முக்கிய கதாபாத்திரத்தில் இடம் பெறுகிறது.
இதுபற்றி அவர் கூறும்போது, “இந்த படத்திற்கான கதையை உருவாக்க ஒரு வருடத்திற்கு முன்பே வேலையை துவங்கி விட்டேன். ஆனால் எனக்கும் நிவின்பாலிக்கும் பேய் என்றாலே பயம். அதனால் என்னை நானே பயமாக கூடாது என்பதற்காக பகலில் மட்டுமே இந்த படத்தின் கதையை எழுதினேன். இது வெறும் ஹாரர் படம் மட்டுமல்ல.. பேண்டஸி படமும் கூட..” என்று கூறியுள்ளார் அகில் சத்யன்.