மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் கிரிஷ். 'கம்யம்' என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர், அதன் பிறகு கஞ்சே, கொண்ட பொலம், கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும், என்.டி.ராமராவ் வாழ்க்கை கதையான என்.டி.ஆர். கதாநாயகடு உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார். தமிழில் சிம்பு, அனுஷ்கா நடித்த 'வானம்' படத்தை இயக்கினார்.
இவர் இயக்கும் பெரும்பாலான படங்களில் அனுஷ்கா நடிப்பார். இருவரும் நெருக்கமான நண்பர்கள். தற்போது அனுஷ்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'காட்டி' என்ற படத்தை இயக்கி வருகிறார். இது அதிரடி திரில்லர் படமாக உருவாகிறது.
கிரிஷ் ஏற்கனவே ரம்யா என்பவரை 2016ல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அவரை விவாகரத்து செய்தார். தற்போது பிரீத்தி சல்லா என்பவரை ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமண புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி உள்ளது.