தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பூ, மரியான் ஆகிய படங்களில் நடித்த நடிகை பார்வதியை பொறுத்தவரை மலையாளம் மட்டுமல்லாமல், தமிழிலும் அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார்.. ஆனால் செழட்டிவாக மட்டுமே நடிப்பதால் இரண்டு மொழிகளிலும் சேர்த்து வருடத்திற்கு இரண்டு படம் வெளியானாலே அது பெரிய விஷயம். இந்தநிலையில் மலையாளத்தில் அவர் நடித்துள்ள இரண்டு படங்கள் பிப்ரவரியில் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்ற தகவல் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது...
அதில் ஒன்று, தேசிய விருதுபெற்ற இயக்குனர் சித்தார்த் சிவா இயக்கத்தில் பார்வதி நடித்துள்ள வர்த்தமானம் என்கிற படம். இந்தப்படத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவியாக நடித்துள்ளார் பார்வதி. இந்தப்படம் வரும் பிப்-19ஆம் தேதி வெளியாகிறது.
இன்னும் பெயரிடப்படாத இன்னொரு படத்தில் கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் ரயில் பயணத்தில் கணவனுடன் சேர்ந்து தம்பதி சகிதமாக மாட்டிக்கொண்ட பயணியாக நடித்துள்ளார் பார்வதி. விஸ்வரூபம் படத்தின் இரண்டு பாகங்களுக்கும் ஒளிபதிவு செய்த ஷானு ஜான் வர்கீஸ் இயக்கியுள்ள இந்தப்படம் வர்த்தமானம் படத்திற்கு முன்பே, அதாவது பிப்-4ல் வெளியாக இருக்கிறது.