மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்கும் பிரபலமான தென்னிந்திய நடிகை கீர்த்தி சுரேஷ். அடிக்கடி அசத்தலான போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டா தளத்தில் பதிவிடுவார். இன்ஸ்டா ஸ்டோரில் அவருடைய போட்டோ ஷுட் ஒன்றின் வீடியோவைப் பதிவிட்டுள்ளார். அதில் அவருடைய செல்ல நாயான நைக்கும் இடம் பெற்றுள்ளது.
வெள்ளை நிற நீளமான கவுன் அணிந்து கொஞ்சம் கிளாமராக தேவதை போல உள்ளார் கீர்த்தி. அவர் போட்டோ எடுக்கும் போது அவருடைய நாய் நைக்கும் கூடவே வந்து நின்று கொண்டிருக்கிறது. இந்த போட்டோ ஷுட்டின் வீடியோவை மட்டும்தான் கீர்த்தி வெளியிட்டுள்ளார். புகைப்படங்களை பிறகு வெளியிடுவார் போலிருக்கிறது.
கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.