துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
இந்திய விண்வெளி விஞ்ஞானியான நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து மாதவன் இயக்கி நடித்து வெளிவந்த படம் 'ராக்கெட்ரி, நம்பி விளைவு'. விமர்சகர்களின் பாராட்டுக்கள், ரசிகர்களின் வரவேற்புடன் இந்தப் படம் வசூல் ரீதியாக நன்றாகவே ஓடி வருகிறது. படத்தின் வெற்றியை நம்பி நாராயணன் குடும்பத்தாருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் மாதவன்.
நம்பி நாராயணன் அவருடைய மனைவிக்கு கேக் கூட்டி விடும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “வெற்றியை மகிழ்ச்சியாக மாற்றி, குடும்பம் முழுவதும் ஒன்று சேர்ந்து கொண்டாடுவது மகிழ்ச்சி. இந்த புகைப்படத்தின் உண்மையான அர்த்தம். நம்பி சாரையும், அவரது குடும்பத்தாரையும் பற்றி நன்றாக அறிந்தவர்களுக்கு மட்டுமே இந்த புகைப்படத்தின் உண்மையான அர்த்தம் விளங்கும். என்னைப் பொறுத்தவரையில் கடவுளின் அருளால் இந்த இலக்கு அடையப்பட்டுவிட்டது,” என்று குறிப்பிட்டுள்ளார்.