மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி | பிளாஷ்பேக் : இயக்குனர் அனு மோகனை தெரியுமா? | பிளாஷ்பேக் : சினிமா பார்க்கச் சொல்லி உருவான தனிப்பாடல் | 2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல | அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் |

மணிரத்னம் இயக்கி உள்ள 'பொன்னியின் செல்வன்' வரலாற்று படத்தின் 2ம் பாகம் வருகிற 28ம் தேதி வெளிவருகிறது. இந்த படத்தின் புரமோசனுக்காக படக்குழுவினர் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக ஐதராபாத்தில் நடந்த விழாவில் பேசிய மணிரத்னம் 'பாகுபலி கொடுத்த தைரியத்தால் பொன்னியின் செல்வன் உருவானது' என்றார்.
மேலும் அவர் கூறியதாவது: பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் ஆர்வம் பல ஆண்டுகளாக எனக்குள் இருந்தது. ஆனால் அதற்கான முயற்சியும், திட்டமிடலும் என்னிடம் இல்லை. காரணம் படத்திற்கு ஆகும் பட்ஜெட். அதனால் இந்த படத்தை நான் உருவாக்குவேன் என்பது கூட எனக்குத் தெரியாது.
இந்த நிலையில் சரித்திர பின்னணியில் 'பாகுபலி' படத்தை ராஜமவுலி எடுத்தார். அந்தபடம் ஏற்படுத்திய தாக்கம் எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. பொன்னியின் செல்வனை உருவாக்கும் உந்து சக்தியை கொடுத்தது. நான் ராஜமவுலிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். பாகுபலியை இரண்டு பாகங்களாக அவர் உருவாக்காவிட்டால் நானும் பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களாக உருவாக்கி இருக்க மாட்டேன். இது எனக்கு புது பாதையை உருவாக்கி தந்தது. நிறைய வரலாற்று கதைகளை எடுக்க முடியும் என்ற நம்பிக்கையை சினிமாத் துறையில் பலருக்கும் கொடுத்தது. இதை அவரை சந்தித்தும் நான் சொல்லி இருக்கிறேன். என்றார்.