5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
ஜுனியர் என்டிஆர், ஜான்வி கபூர், சைப் அலிகான், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் அனிருத் இசையமைப்பில், கொரட்டலா சிவா இயக்கத்தில் தயாராகி வரும் பான் இந்தியா படம் 'தேவரா'. இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ சற்று முன் வெளியிடப்பட்டது. விஷுவலாக மிரட்டலாக அமைந்துள்ள இந்த வீடியோ ரசிகர்களையும், ஜுனியர் என்டிஆர் ரசிகர்களையும் கவர வாய்ப்புள்ளது.
'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு ஜுனியர் என்டிஆர் நடித்து வெளியாக உள்ள படம் இது. அந்தப் படம் உலக அளவில் புகழ் பெற்று வசூலைக் குவித்தது. அதற்கடுத்து ஜுனியர் என்டிஆர் நடிக்கும் படம் என்பதால் இப்படம் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தென்னிந்திய மொழிப் பக்கம் வந்து தெலுங்கில் நடிக்கும் முதல் படம். இன்று வெளியான க்ளிம்ப்ஸ் வீடியோவில் ஜான்வியின் காட்சிகளை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே. ஜுனியர் என்டிஆர் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.
கடலும், கடல் சார்ந்த இடமுமாக படம் இருக்கும், அது கடல் மாபியா பற்றிய படமா, கடல் கொள்ளையர்களைப் பற்றிய படமா என கதையைப் பற்றி யோசிக்க வைக்கிறது.
வீடியோவின் முடிவில் ஜுனியர் என்டிஆர் சொந்தக் குரலில் தமிழில் பேசியுள்ள, “இந்தக் கடலுல மீனை விட அதிகமா கத்தியும், ரத்தமும் கொட்டிக் கிடக்கு. அதனாலதான் இதுக்கு பேரு செங்கடல்,” என்பதை கதையின் சுருக்கமாக எடுத்துக் கொள்ளலாம்.
ஏப்ரல் 5ம் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.