தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தெலுங்கு சினிமாவின் 'பிரின்ஸ்' என்று போற்றப்படுகிறவர் மகேஷ் பாபு. சினிமாவில் நடிப்பது தவிர்த்து பல கிராமங்களை தத்தெடுத்து பராமரித்து வருகிறார். தனது அறக்கட்டளை மூலம் ஏழை குழந்தைகளின் இதய ஆபரேஷனுக்கு உதவி வருகிறார். ஏழை மாணவர்களின் கல்விக்கும் உதவி வருகிறார். இவருக்கு ஒரு மகன், மகள். மகன் கவுதம் கிருஷ்ணா சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருவதோடு படித்தும் வருகிறார். மகள் சித்தாரா வெளிநாட்டில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் சித்தராவுக்கு ஒரு ஆடை விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் நடித்ததற்காக அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. இந்த சம்பளத்தை அவர் முன்னணி தொண்டு நிறுவனத்திற்கு தானமாக வழங்கி இருக்கிறார். இதற்காக அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. சித்தாராவிற்கு 12 வயதே ஆகிறது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.