தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கடந்த 2021ம் ஆண்டில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் நடித்து வெளிவந்த படம் 'புஷ்பா'. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் இதே கூட்டணியுடன் உருவாகி வருகிறது.
ரூ.400 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் புஷ்பா 2ம் பாகம் உருவாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன், சுகுமார் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்காலிகமாக இப்படத்தை நிறுத்தி வைத்தனர். சமீபத்தில் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 6ந் தேதி அன்று திரைக்கு வருவதைத்யொட்டி இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் இதன் படப்பிடிப்பு மெல்போர்னில் நடைபெற்றது .அப்போது டேவிட் வார்னர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது என்கிறார்கள்.இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.