ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
நடிகர் தனுஷிற்கும், ரஜினியின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யாவுக்கும் 2004ல் திருமணம் ஆனது. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். 20 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்தனர். சட்டபூர்வமான விவாகரத்து கோரி பரஸ்பரம் ஒப்புதலோடு நீதிமன்றத்தில் இருவரும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு தற்போது முதன்மை குடும்ப நல கோர்ட்டில் நடந்து வருகிறது. விசாரணையும் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இருவரும் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டியிருந்தது. ஆனால் இருமுறை வழக்கு வந்தபோதும் இவர்கள் ஆஜராகவில்லை. இதனால் இவர்கள் சேர்ந்து வாழ பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தனுஷ், ஐஸ்வர்யா இன்று(நவ., 21) ஆஜராகினர். இருவரும் சேர்ந்த வாழ விருப்பம் இன்றி பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதாக தெரிகிறது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை வருகிற நவ., 27ல் அறிவிப்பதாக நீதிமன்றம் அறிவித்து வழக்கை அன்றைய தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.