துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் தமிழில் கடந்த ஜுன் மாதம் வெளிவந்து, வரவேற்பைப் பெற்று 100 கோடி வசூலைக் கடந்த படம் 'மகாராஜா'. இப்படம் நேற்று சீனாவில் சுமார் 30 ஆயிரம் காட்சிகளாக திரையிடப்பட்டது.
முதல் நாள் வசூலாக சுமார் 5 கோடியை வசூலித்துள்ளது. அதற்கு முன்பு நடத்தப்பட்ட பிரிமியர் காட்சிகள் மூலம் கிடைத்த 5 கோடியுடன் சேர்த்து மொத்தமாக 10 கோடி வசூலை வசூலித்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது. சீன ரசிகர்களுக்குப் படம் பிடித்துள்ளதாகவும், வார இறுதி நாள் வசூல் இன்னும் அதிகம் வரும் எனவும் எதிர்பார்க்கிறார்கள்.
சீன மீடியாக்களிலும் 'மகாராஜா' படத்திற்கான விமர்சனங்களும் பாசிட்டிவ்வாகவே உள்ளதாகத் தகவல். அந்த விமர்சனங்களின் காரணமாகவும் வரும் நாட்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள். அதனால், படம் குறிப்பிடும்படியான வசூலைப் பெறலாம்.