ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தென்னிந்திய சினிமாவில் அது எந்த மொழியாகட்டும், 80, 90 கால கட்டங்களில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்தவர்கள் வருடத்திற்கு ஒரு முறை ரியூனியன் என்கிற பெயரில் ஒரு நாள் ஒன்று கூடி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க கேரளாவிலும் அவ்வப்போது இது போன்ற ரீயூனியன் சில விஷயங்களுக்காக நடக்கிறது. அப்படி மலையாள சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுசித்ரா. தமிழில் சிநேகதியே, காசி, ஏர்போர்ட் உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.
தற்போது இவர் பல வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கி குடும்பத்துடன் அமெரிக்காவில் வசிக்கிறார். சமீபத்தில் இவர் கேரளாவுக்கு வருகை தந்துள்ளார், இதை முன்னிட்டு இவரது நட்பு வட்டாரத்தில் உள்ள சீனியர் நடிகைகளான மேனகா, கார்த்திகா, வனிதா, சிப்பி, ஸ்ரீ லட்சுமி மற்றும் சோனா நாயர் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியை நடிகை கார்த்திகா (நாயகன் கமல் மகள்) மேற்கொண்டார்.
இந்த சந்திப்பு குறித்து நடிகை சுசித்ரா கூறும்போது, “இரண்டு வருடங்களுக்கு முன்பு லவ்ளீஸ் ஆப் திருவனந்தபுரம் என்கிற வாட்ஸ் அப் குரூப் துவங்கப்பட்டது. அதில் இவர்களுடன் நானும் ஆரம்பத்திலேயே இணைந்தேன். அமெரிக்காவில் இருந்ததால் இவர்கள் அடிக்கடி ஒன்று கூடும் ரீயூனியனில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அந்த வருத்தம் இருந்தது. முன்பு கேரளா வரும் போதும் இவர்களில் ஒவ்வொருவரை அவ்வப்போது தனித்தனியாக பார்த்துவிட்டு செல்வேன். ஆனால் தற்போது கேரளா வர வேண்டிய வேலை இருந்தபோது அந்த தகவலை நான் தெரியப்படுத்தியதும் எனக்காக இவர்கள் அனைவரும் எனக்காக ஒன்றுகூடி உள்ளார்கள்.. மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறியுள்ள சுசித்ரா கேரளாவில் 15 நாட்கள் முகாமிட்டுள்ளாராம்.