தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் சிறந்த நீச்சல் வீரனாக வளர்ந்து வருகிறார். பல சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை குவித்து வருகிறார். மகன் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்கிற லட்சியத்துடன் அதற்கான பயிற்சி மையங்கள் துபாயில் இருப்பதால் துபாயில் சொந்த வீடு வாங்கி அங்கேயே செட்டிலாகி விட்டார் மாதவன்.
தற்போது மகனின் கடல் நீச்சல் பயிற்சிக்காகவும், தனது சொந்த பயன்பாட்டிற்காகவும் சொகுசு படகு ஒன்றை வாங்கி உள்ளார் மாதவன். இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 14 கோடி என்கிறார்கள். படகு ஓட்டுவதற்கு அவர் துபாயில் பயிற்சி பெற்று அதற்கான லைசன்சும் பெற்றுவிட்டாராம். ஓய்வு எடுக்கவும், படத்துக்கான கதை விவாதங்களில் இயக்குனர்களுடன் ஈடுபடவும் இந்த படகை மாதவன் பயன்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் இந்த படகில்தான் மாதவன் குடும்பத்தாரும், நயன்தாரா குடும்பத்தாரும் புத்தாண்டு கொண்டாடி மகிழ்ந்தார்கள்.