தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

கேம் சேஞ்சர் படத்திற்கு பின் ‛உப்பன்னா' பட இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் ராம் சரண். இவரின் 16வது படமாக உருவாகும் இதில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கின்றார். சிவராஜ் குமார், ஜெகபதி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு மைசூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று ராம்சரணின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்திற்கு 'பேடி' எனும் தலைப்பு வைத்துள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.
போஸ்டரில் ராம் சரண் முரட்டுத்தனமான தோற்றத்தில் உள்ளார். மண் சார்ந்த- அழுத்தமான கதையில் இப்படம் உருவாகிறது என போஸ்டரை பார்க்கும்போதே புரிந்து கொள்ள முடிகிறது.