அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு |
கமலுடன் இந்தியன் -2 படத்தில் நடித்து வரும் சித்தார்த், தனது சோசியல் மீடியாவில் எப்போதுமே ஆக்டீவாக இருந்து வருபவர். குறிப்பாக அரசியல் சார்ந்த விசயங்களுக்கு தனது கருத்துக்களை துணிச்சலாக பதிவிட்டு வரும் இவர் மத்திய-, மாநில அரசுகளையும் விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் டில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்த தனது கருத்துக்களையும் டுவிட்டரில் பதிவிட்டு வரும் இவர், நாதுராம் கோட்சேவை கொலையாளி, தீவிரவாதி என்றும் விமர்சித்து டுவீட் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது, தனது டுவிட்டர் கணக்கு ஐந்து முறை ஹேக் செய்யப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார் சித்தார்த். அதோடு பதிவு செய்யும் கருத்துக்கள் தன்னை பாலோ செய்பவர்களுக்கு தெரிவதில்லை. கடந்த 16 மாதங்களாக எனது டுவிட்டர் கணக்கில் பாலோ செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கவில்லை. மேலும், தன்னை ஏற்கனவே பாலோ செய்து வந்தவர்கள் அன்பாலோ செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.தனது இந்த குற்றச்சாட்டை டுவிட்டர் இந்தியா நிறுவனத்துக்கும் டேக் செய்திருக்கிறார் சித்தார்த்.