துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
ஒரு படத்தில் மதுபானக்கடையில் திருட போய் உள்ளே மாட்டிக் கொள்ளும் வடிவேலு, அந்த உரிமையாளரிடம் எப்ப சார் கடையை திறப்பீங்க என கேட்டு அதகளம் செய்வார். அதுபோன்று வலிமை படத்தின் அப்டேட் எப்ப வரும் படக்குழுவினரிடம் அஜித் ரசிகர்கள் நச்சரித்து வருகின்றனர். படம் துவங்கி ஓராண்டுக்கு மோலகிவிட்ட நிலையில் இன்னும் ஒரு போஸ்டர் கூட வெளிவரவில்லை. இதனால் விரக்தியில் கடவுளிடம் கூட வேண்டுதல் வைத்த ரசிகர்களின் போட்டோக்கள் வெளியாகின.
இந்நிலையில் சமீபத்தில் அஜித்தை சந்தித்த ஒரு ரசிகர், அவரிடமே படத்தின் அப்டேட்டை கேட்டார். அதற்கு இந்த மாதம் இறுதியில் நிச்சயம் இருக்கும் என அஜித் சொன்னதாக அவர் தெரிவித்தார். இப்போது இப்படத்தில் நடித்துள்ள நடிகை சங்கீதாவும் இம்மாதம் நிச்சயம் வலிமை அப்டேட் உள்ளது. அதற்கான பணி நடக்கிறது என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.