விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" |

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படம் தொடங்கப்பட்டபோது அந்த படத்தில் அஜித் போலீசாக நடிப்பதாக செய்தி வெளியிட்டவர்கள், அதன்பிறகு அப்படம் குறித்த எந்தவொரு அப்டேட்டையும் வெளியிடவில்லை. இதனால் சோசியல் மீடியாவில் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அஜித்தின் ரசிகர்கள் நொந்து போனார்கள்.
இந்நிலையில், ஐதராபாத்தில் ஒரு ரசிகர் அஜித்திடம் இதுப்பற்றி கேட்டபோது, பிப்ரவரியில் வலிமை அப்டேட் வெளியாகும் என்று கூறியிருந்தார். அதன்பிறகு வலிமையில் நடித்துள்ள நடிகை சங்கீதாவும் பிப்ரவரியில் வலிமை அப்டேட் இருக்கும் என்றார். அதேபோல் நேற்று இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, வலிமை படத்தில் அஜித் பாடும் ஓப்பனிங் பாடலை டைரக்டர் விக்னேஷ் சிவன் எழுதியிருப்பதாக அப்டேட் கொடுத்திருந்தார்.
இந்தநிலையில் தற்போது வலிமை பட தயாரிப்பாளரான போனிகபூரும் ஒரு பேட்டியில் வலிமை படம் குறித்தும் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில், பிப்ரவரி 15-க்குள் வலிமை படப்பிடிப்பு முடிகிறது. அதையடுத்து ஒரேயொரு சண்டை காட்சி மட்டும் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளது. அதையடுத்து இறுதிக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். இதை வைத்துப்பார்க்கையில் கோடை விடுமுறையில் வலிமை திரைக்கு வந்து விடும் என்று தெரிகிறது.