திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் இனம் புரியாத அமைதி நிலவுகிறது. சிலரிடம் பயம் கலந்த பேச்சு இருக்கிறது. இன்னும் சிலர் துாக்கம் இல்லாமல் தவிக்கிறார்களாம். காரணம், போதை விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் மாட்டி சிறை சென்றதுதான். அடுத்து அந்த நடிகர் சிக்கப்போகிறார், அந்த நடிகையிடம் விசாரணை நடக்கப்போகிறது, அந்த பார்ட்டிக்கு சென்றவர்களை போலீஸ் கண்காணிக்கிறது என தினமும் செய்திகள் கசிய, அதை படித்துவிட்டு பார்ட்டிக்கு செல்பவர்கள், இரவு பறவைகள் மிரண்டு போய் இருக்கிறார்களாம்.
நாம் அகப்படுவோமோ? நம் பெயர் வெளியே வருமா? நம்மை விசாரணைக்கு அழைப்பார்களா? அப்படியானால் நம் எதிர்காலம் என்று தவிக்கிறார்களாம். ஆனால் இன்னொரு தரப்போ அவ்வளவு துாரம் போகாது. சிலருடன் விசாரணை நின்றுவிடும். அதற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன என்று ஓரளவு தைரியத்தில் இருக்கிறார்களாம். தமிழ் சினிமாவில் போதை பொருள் பயன்பாடு இருக்கிறது. இந்த சூழ்நிலையிலாவது அதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இன்டஸ்ரி கெட்டுவிடும் என்பது பலரின் கருத்தாகவும் இருக்கிறது.