சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி முதலில் ரேடியோவில் ஆர்.ஜே வாக பணியாற்றினார் அதன் பிறகு சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் ஹீரோவாக நடித்தும், இயக்கியும் வருகிறார் . தற்போது சிங்கப்பூர் சலூன், சொர்க்க வாசல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து அட்லீயின் உதவி இயக்குனர் அசோக் குமார் இயக்கத்தில் ஆர்.கே.பாலாஜி புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு சிவகார்த்திகேயனை வைத்து சிங்கப்பாதை எனும் படத்தை அசோக் குமார் இயக்குவதாக இருந்தது. இதனை கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பதாக கூறப்பட்ட நிலையில் ஒரு சில காரணங்களால் சிவகார்த்திகேயன் இந்த படத்தை விட்டு விலகியதால் இப்படம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.