திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னட திரையுலகின் பிரபல நடிகராக இருக்கும் நடிகர் தர்ஷன் தனது ரசிகரான ரேணுகா சாமி என்பவரை தனது பண்ணை வீட்டில் வைத்துக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது காதலி பவித்ரா கவுடா மற்றும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் உள்ளிட்ட 17 பேர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டனர். முதலில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த தர்ஷன் அங்கே முறைகேடாக வசதிகளை பெற்றார் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து தற்போது பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தற்போது சிறையில் 100 நாட்களை கழித்து விட்ட தர்ஷன் தொடர்ந்து தனக்கு ஜாமீன் கேட்டு மனு செய்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனக்கு ஜாமீன் வழங்குமாறு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் வரும் செப்டம்பர் 27ம் தேதிக்கு அதன் விசாரணையை தள்ளி வைத்தது. அதேசமயம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15, 16, 17 எண் கொண்ட குற்றவாளிகள் மூவருக்கு மட்டும் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.