சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
மலையாள திரையுலகில் தற்போது மினிமம் கியாரண்டி ஹீரோவாக, தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ள நடிகராகவும் இருப்பவர் நடிகர் டொவினோ தாமஸ். நல்ல கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்வது தான் தன்னை நீண்ட காலம் திரையுலகில் பயணிக்க வைக்கும் என்பதை உணர்ந்து, தொடர்ந்து அதுபோன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார் டொவினோ தாமஸ். கடந்த 2012ல் 'பிரபுவின்டே மக்கள்' என்கிற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமான அவர், அடுத்த வருடம் சல்மான் நடித்த 'ஏபிசிடி' படத்தில் வில்லனாக ஒரு இளம் அரசியல்வாதியாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் ஓரளவு தெரிந்த முகமாக மாறினார். அதன் பிறகு மாய நதி, மின்னல் முரளி என தனக்கு கிடைத்த வாய்ப்புகளை கச்சிதமாக பயன்படுத்தி தற்போது முன்னணி நடிகர் வரிசைக்கு உயர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் திரையுலகில் அடியெடுத்து வைத்து தற்போது 12 வருடங்களை நிறைவு செய்துள்ளார். இது குறித்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கும் விதமாக, சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள டொவினோ தாமஸ், “12 வருடங்களில் 50 படங்கள்.. என் மனம் பெருமிதத்தால் நிரம்பி வழிகிறது.. இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், சக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என இத்தனை வருடங்களில் நான் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். குறிப்பாக நான் வளர்ந்து வந்த நடிகராக இருந்த காலகட்டத்திலும் சரி இப்போது இருக்கும் நிலையிலும் சரி எனக்கு தொடர்ந்து அன்பும் ஆதரவும் அளித்து என்னை பிரமிக்க வைக்கும் ரசிகர்களுக்கு நன்றி. நீங்கள் இல்லாமல் இங்கே நான் எதையும் செய்திருக்க முடியாது” என்று கூறியுள்ளார்.