தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படத்தின் தோல்விக்கு பின் ‛உப்பனா' பட இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் அடுத்து ஒரு படத்தில் நடிக்கிறார். ராம் சரணின் 16வது படமாக உருவாகும் இதற்கு 'பேடி' என பெயரிட்டுள்ளனர். இருதினங்களுக்கு முன் ராம் சரண் பிறந்தநாளில் இதற்கான அறிவிப்பு முதல்பார்வை போஸ்டருடன் வந்தது. இதில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். சிவராஜ் குமார், ஜெகபதி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு மைசூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் முதல் முன்னோட்ட வீடியோவை வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி அன்று வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.