சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
நடிகர் அருண்பாண்டியனுக்கு கிரணா, கவிதா, கீர்த்தி என 3 மகள்கள். இதில் கீர்த்தி பாண்டியன் ‛தும்பா, அன்பிற்கினியாள், கண்ணகி, ப்ளூ ஸ்டார்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர்தான் நடிகர் அசோக்செல்வனை காதல் திருமணம் செய்துள்ளார். அப்பா பாணியில் சினிமாவில் ஆர்வமாக இருக்கிறார். உதய் கே நடிப்பில் இவர் நடித்துள்ள படம் 'அஃகேனம்'. இதற்கு ஆயுத எழுத்து என அர்த்தம். 3 கேரக்டரை சுற்றி படம் வருவதால் இப்படிப்பட்ட தலைப்பு. இந்த படத்தை அருண்பாண்டியனே தயாரித்து இருக்கிறார். அவர் முக்கியமான கேரக்டரிலும் வருகிறார். படம் ஜூலை 4ல் ரிலீசாகிறது.
கதைப்படி உங்களுக்கும், அருண்பாண்டினுக்கும் சண்டை காட்சிகள் இருக்குதா என்று கீர்த்திபாண்டியனிடம் கேட்டால் '' கதையை சொல்லமாட்டேன். முதன்முறையாக கால் டாக்சி டிரைவராக நடித்து இருக்கிறேன். எனக்கு கார் ஓட்டுவது ரொம்ப பிடிக்கும். நடிக்க வராவிட்டால் ரேசர் ஆகி இருப்பேன். இதில் அந்த கேரக்டரில் நடித்தது மகிழ்ச்சி. ஒரு பாடல் காட்சியில் மிகவும் இளமையான தோற்றத்தில் அப்பா நடித்துள்ளார். ஒடிசா பின்னணியில் நடக்கும் அந்த பாடலை பார்த்து ஆச்சரியப்பட்டேன். டீ ஏஜிங் பண்ணாமலே அப்பாவை அவ்வளவு இளமையாக பார்த்தது மகிழ்ச்சி. பரத் வீரராகவன் இசையமைக்கிறார். படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது படக்குழுவை உற்சாகப்படுத்தியுள்ளது. இயக்குனர், இசையமைப்பாளர், எடிட்டர் உள்ளிட்ட அனைவரும் புதுமுகங்களே'' என்றார்.