23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் 2008ம் ஆண்டு வெளிவந்த 'பழனி' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்பே தெலுங்கில் அறிமுகமாகிவிட்டார். சுமார் 15 வருடங்களுக்கும் மேலாக கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் தன்னுடைய உடலழகை இன்னமும் அப்படியே பராமரித்து வருகிறார்.
கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டாலும், தற்போதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருவதால் தினசரி உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றைத் தொடர்ந்து செய்து கொண்டும் கட்டுக்கோப்பாக உணவை அருந்தியும் தனது ஸ்லிம் அழகைப் பாதுகாத்து வருகிறார் காஜல்.
காலையில் ஒரு முட்டையுடன் ஆரம்பமாகும் அவரது காலை உணவு ஒரு மணி நேரம் கழித்து ஜோவர் ரொட்டி சாப்பிடுவாராம். மதிய உணவுக்கு முன்பாக சில பழங்களை உண்பாராம். மதிய உணவாக சாதம், பருப்பு, காய்கறிகள் அடங்கிய உணவு.
பானமாக அருந்த வேண்டும் என்றால் புரேட்டீன் ஷேக்ஸ் அல்லது இளநீர் மட்டும் தான் குடிப்பாராம். காலையும் மாலையும் ஏர்ல் கிரே டீ குடிப்பது ரொம்பவும் பிடித்த விஷயமாம் காஜலுக்கு. மதிய உணவு போலவே இரவு உணவும் கொஞ்சமாக சாப்பிடுவாராம். ஒரு முழுமையான வெஜிடேரியன் உணவு உட்கொள்பவர். தினசரி உணவில் நார்ச்சத்து, புரோட்டீன், கார்போஹைட்ரேட்ஸ் அடங்கிய உணவுகள் தான் அவருடைய வழக்கம்.
இத்தனை வருடங்களாக காஜல் இப்படியே இருக்கிறாரே என அவர் மீது கண் வைத்துவிடாதீர்கள்.