தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கொரோனா லாக்டவுனுக்குப்பிறகு ஓடிடி தளங்களுக்கான வெல்யூ அதிகரித்து விட்டன. மெகா படங்களே நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகும் நிலையில் வெப்சீரிஸ்களும் அதிகப்படியாக தயாராகி வருகின்றன. அந்தவகையில் சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா உள்பட பல மெகா நடிகைகளும் வெப்சீரிஸ்களில் நடித்து வரும்நிலையில் தற்போது நயன்தாராவும் நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் வெப்சீரிஸில் நடிக்கிறார். அதற்கு Baagubali before the beginning என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் முதல் தொடங்குகிறது.
ராஜமவுலி இயக்கிய பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் ரம்யா கிருஷ்ணன் நடித்த ராஜமாதா கதாபாத்திரத்தின் இளமைக்கால கதையை மையமாக வைத்து இந்த தொடரை உருவாக்க உள்ளார் ராஜமவுலி. முக்கியமாக பாகுபலி படத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் அதற்கு முந்தைய கால கட்டத்து கதையில் இந்த வெப்சீரிஸ் உருவாக்க உள்ளார்.