மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
குக் வித் கோமாளி சீசன் 2 கொண்டாட்டம் நிகழ்ச்சிக்காக பாகுபலி தேவசேனா கெட்டப் போட்டுள்ள சிவாங்கியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் சீசன் 7-ல் கலந்து கொண்டு தனது இனிமையான குரலால் ரசிகர்களை ஈர்த்தவர் சிவாங்கி. தொடர்ந்து விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டார். அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவருக்கு நல்ல புகழை தேடிக் கொடுத்தது.
தற்போது படங்களில் பிஸியாகிவிட்ட சிவாங்கி, குக் வித் கோமாளி சீசன் 2-வின் வெற்றியை கொண்டாடும் குக் வித் கோமாளி 2 கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சிக்காக சிவாங்கி பாகுபலி படத்தின் தேவசேனா கெட்டப்பை போட்டு, அதன் புகைப்படங்களை தனது இண்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.