ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
சபரிமலையில் உள்ள ஐயப்பனின் பக்தையான மாளிகைப்புரத்து அம்மன் கதையை மையப்படுத்தி மலையாளத்தில் மாளிகைப்புரம் என்கிற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் உன்னி முகுந்தன் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் ஐயப்ப பக்தையாக சிறுமி தேவானந்தா என்பவர் நடித்திருக்கிறார். விஷ்ணு சசி சங்கர் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அமலாபால் நடித்த கடாவர் உள்ளிட்ட பல படங்களுக்கு கதை எழுதிய அபிலாஷ் பிள்ளைதான் கதை எழுதியுள்ளார்.
இந்த படத்தின் துவக்கத்தில் ஐயப்பன் மற்றும் மாளிகைப்புரத்து அம்மன் இருவர் பற்றிய கதைச்சுருக்கம் இடம்பெறுகிறது. இதனை மம்முட்டி பேசினால் நன்றாக இருக்கும் என நினைத்த படக்குழுவினர் அவரிடம் அதை கோரிக்கையாக வைத்தனர். படத்தின் ஹீரோவான உன்னி முகுந்தனுடன் மம்முட்டி நெருங்கிய நட்பு கொண்டவர் என்பதால் அவரும் மறுப்பின்றி சம்மதித்து இந்த கதை சுருக்கத்திற்கு டப்பிங்கும் பேசியுள்ளார். மம்முட்டியின் குரல் இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்துவிட்டது என்கின்றனர் படக்குழுவினர்.